அரசியலில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன: நாளை கமல் முக்கிய ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (09:08 IST)
அரசியலில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் அடுத்த கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தனது கட்சியின் அடுத்த கட்ட நிலை, உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை செய்ய நாளை காலை 11 மணிக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் காணொளி மூலம் ஆலோசனை செய்ய இருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் ஒரு சில அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்