ஜூன் 28க்கு பின் என்னென்ன தளர்வுகள்: முதல்வர் இன்று ஆலோசனை!

வெள்ளி, 25 ஜூன் 2021 (09:02 IST)
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜூன் 28ம் தேதிக்கு பின்னர் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று முடிவு செய்துள்ளார் 

இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையில் என்னென்ன கூடுதல் தளர்வுகள் வழங்கலாம் என்றும், ஏற்கனவே தளர்வுகள் இல்லாமல் இருக்கும் மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.
 
அனேகமாக கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இதுவரை எந்தவித தளர்வுகள் இல்லாத நிலையில் ஒருசில தளர்வுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் மற்ற மாவட்டங்களில் ஜவுளி கடைகள் நகைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும்  மால்கள், பெரிய கடைகள் திரையரங்குகள் இப்போதைக்கு அனுமதிக்க படாது என்றும் அடுத்த மாதம் தான் இதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை செய்த பின் நாளை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்