திமுகவிடம் 100 கோடி வாங்கினாரா பிரசாந்த் கிஷோர் ! அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு !

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (15:24 IST)
ஸ்டாலின் மற்றும் பிரசாந்த் கிஷோர்

திமுக தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரிடம் 100 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ஆலோசனைகளைப் பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

திமுக வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின்  நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறது. இதை முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து திமுக மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 50ஆண்டுகளுக்கும் மேல் கட்சி நடத்தி வரும் ஒரு கட்சிக்கு ஆலோசனை செய்ய ஒருவர் தேவை என்றால் ஆளுமையுள்ள தலைவர், முடிவெடுக்கும் தலைவர் அந்த கட்சியில் இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் திராவிடத்தை முன்னிறுத்தும் ஒரு கட்சிக்கு வட இந்திய பார்ப்பனரின் உதவித் தேவையா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது ‘இப்போது திமுக கார்ப்பரேட் கட்சி ஆகிவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இனி அவர்களுக்கு திராவிடக் கொள்கைகளும் இல்லை, பெரியாரிய கொள்கைகளும் இல்லை.’ எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்