தமிழகத்தில் திமுக ஏதாவது போராட்டத்தை ஆரம்பிக்கும் போதோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் செய்யும் போதோ அனைத்து ஊடகங்களும் அதன்மீது கவனத்தை வைத்திருக்கும்போது திடீரென ரஜினிகாந்த் ஒரு பேட்டியை அளித்து, திமுகவின் போராட்ட செய்தியை திசை திருப்பி விடுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்
ஏற்கனவே இதே போன்று பல முறை ரஜினிகாந்த் செய்திருப்பதாக அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி வருகின்றனர். இந்த நிலையில் திமுக கடந்த 3 நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றது. லட்சக்கணக்கானோர் இதுவரை கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் திடீரென இன்று காலை ரஜினிகாந்த் செய்திகளை செய்தியாளர்களை சந்தித்து சிஏஏ குறித்து ஆதரவான தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து அனைத்து ஊடகங்களும் திமுகவின் கையெழுத்து வேட்டை செய்தியை மறந்துவிட்டு தற்போது ரஜினிகாந்த் பேட்டியை ஒளிபரப்பி வருகின்றன. எனவே திமுகவின் கையெழுத்து இயக்கத்தின் செய்தியை திசை திருப்புவதற்காகவே ரஜினிகாந்த் இந்த பேட்டியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் வட்டிக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் சர்ச்சையை மறக்கடிக்கும் நோக்கத்தில்தான் இந்த பேட்டியை அவர் கொடுத்துள்ளதாக எம்எல்ஏ தமீம் அன்சாரி அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.