சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

Siva

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (18:05 IST)
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அவர் ஒப்புதல் அளிக்காத 10 மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை அடுத்து பல்கலைக்கழகங்களை வேந்தராக தமிழக முதல்வர் மாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பல்கலைக்கழக துணைவேந்தர்களை இனி முதல்வரே நியமனம் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில் அந்த மசோதா நிறைவேறி உள்ளதால் அந்த பல்கலைக்கழகத்திற்கும் முதல்வர் வேந்தராகவும் துணைவேந்தராக மருத்துவத்துறை அமைச்சர் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
அதேபோல் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தை ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கே கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி மேலும் 7  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. அந்த 7 பல்கலைக்கழகங்களின் பட்டியல் இதோ:
 
1. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
 
2.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
 
3.தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா
 
4.தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
 
5. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா.
 
6. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா
 
7. அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா  . 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்