அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு: காவல்துறையில் மனு அளித்த ஜெயகுமார்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (18:19 IST)
அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையில் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கூறி அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார் 
 
ஜூலை 11-ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட உள்ளது என்பதும் அந்த பொதுக்குழு நடக்குமா என்பது வரும் திங்கட்கிழமை வெளியாகும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை பொறுத்து தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்