சிலிண்டர் வெடித்து இறந்த முபீன்; அடக்க செய்ய முன்வராத முஸ்லீம்கள்! – என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (08:58 IST)
கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்து இறந்த இஸ்லாமியர் முபீனின் உடலை நல்லடக்கம் செய்ய இஸ்லாமியர்கள் முன்வராத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்கள் முன்னதாக கோவையில் காரில் வைத்த கேஸ் சிலிண்டர் வெடித்து முபீன் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தீபாவளி சமயம் மக்கள் கூடும் இடத்தில் நடந்த இந்த அசம்பாவிதம் சதி செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ALSO READ: இங்கிலாந்து ராணிக்கு ஆயுர்வேத சிகிச்சை! இந்தியா வந்த காரணம் இதுதானாம்!

இந்நிலையில் உயிரிழந்த முபீனின் உடலை நல்லடக்கம் செய்ய அனைத்து ஜம்மாத்துகளும் முன்வரவில்லை. அமைதியை விரும்புவதாலும், சமூக விரோத செயல்களுக்கு துணை போகாமல் இருப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜமாத்துகள் தெரிவித்துள்ளன.

எனினும் மனிதாபிமான அடிப்படையில் பூமார்க்கெட் ஜமாத்தில் முபீனை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்