கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் யா? பாஜக பிரமுகர் டுவிட்!

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (08:08 IST)
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென கார் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பான நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு உள்பட காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
கோவையில்  நேற்று முன் தினம் நடந்த மாருதி கார் வெடிப்பில் தொடர்புடையவர்களாக முகம்மது தல்கா, முகம்மது அசாருதீன், முகம்மது ரியாஸ், ஃ பிரோஸ் இஸ்மாயில், முகம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. 
 
இப்போது வரை இது சிலிண்டர் வெடித்த வழக்காகவே கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைந்து செயல்பட்டு ஐந்து பேரை கைது செய்த காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிற அதே வேளையில், இதன் பின்னணியில் ஐ எஸ் ஐ எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கங்கள் உள்ளனவா என்பதையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்