இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், வெடித்துச் சிதறிய காருக்குள் பால்ரஸ் குண்டுகள் மற்றும் ஆணிகள் அங்கு கிடந்ததை தடய அறிவியல் துறையில் கண்டுபிடித்துள்ளனர்.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர், உக்கடம் பகுதியில் பழைய துணிகள் விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்ததாகவும், இவரது வீடு மற்றும் உறவினர்களிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜமேஷா முபீன் வீட்டின் அருகிலுள்ளள சிசிடிவி ஆட்சி ஒன்றில் சனிக்கிழமை இரவவு 11:25 மணிக்கு, அவர் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கிச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.