கோவை வெடிவிபத்து: திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை - தினகரன் டுவீட்

திங்கள், 24 அக்டோபர் 2022 (19:08 IST)
கோவை   நகரிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில்  நேற்று காலையில் அங்கிருந்த ஒரு மாருதி ஆல்ட்டோ கார் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,’’ உளவுத்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை   நகரிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று காலையில்  அங்கிருந்த ஒரு மாருதி ஆல்ட்டோ கார் வெடித்து சிதறியது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த விபத்தில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த வெடிவிபத்து குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து டிவிடி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’

கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது  சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்கவேண்டும். இனி, தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காதபடி உளவுத்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj

கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது.(1/2)

— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 24, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்