இது ரயில்வே ஸ்டேஷனா? இல்ல ஏர்போர்ட்டா? வேற லெவலில் தயாராகும் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்! - 3டி மாடல் வைரல்!

Prasanth Karthick
திங்கள், 15 ஜூலை 2024 (09:41 IST)

சென்னையின் முக்கிய ரயில் முனையங்களில் ஒன்றான தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் புனரமைக்கப்பட உள்ள நிலையில் புதிய மாதிரி படம் வெளியாகியுள்ளது.

சென்னை பெருநகரில் ஏராளமான மக்கள் வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் நிலையில் சென்னையின் முக்கியமான ரயில்வே சந்திப்புகளாக சென்னை எழும்பூர், செண்ட்ரல் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய சந்திப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடங்கி பல பகுதிகளில் இருந்து பயணிப்போருக்கும் தாம்பரம் முக்கியமான ரயில்வே சந்திப்பாக உள்ளது. பல மாவட்டங்களை சேர்ந்தோரும் சென்னையை சுற்றியுள்ள பல செல்போன் உதிரிபாக நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் நிலையில் தாம்பரம் வழியாக செல்லும் ரயில்களையே சொந்த ஊர்களுக்கு செல்ல பெரும்பாலும் நம்பியுள்ளனர்.

ALSO READ: இன்றைக்கு 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இதனால் நாளுக்கு நாள் தாம்பரம் ரயில் நிலையம் திரளான மக்கள் கூடும் இடமாக மாறி வருகிறது. அதற்கேற்ப தாம்பரம் ரயில் நிலையம் புனரமைக்கப்பட தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சில ஆண்டுகள் முன்னதாக ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் புனரமைப்பு பணிகளை தொடங்காமல் இருந்த நிலையில் தற்போது அந்த டெண்டரை வேறு தனியார் கட்டுமான நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 6 நடைமேடைகளையும் இணைக்கும் டெர்மினல் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதில் பயணிகளுக்கான ஓய்வறை, கழிவறை, உணவகங்கள், மேலும் சில கடைகளும் இடம்பெற உள்ளன. பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ள இந்த புதிய ரயில் முனையத்தின் மாதிரி படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்