அண்ணாமலையை அடுத்து அரசியலில் குதிக்கின்றாரா விஜயகுமார் ஐ.ஏ.எஸ்?

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (17:20 IST)
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்து விட்டு முழு நேர அரசியலில் இணைந்தது போல் விஜயகுமார் ஐபிஎஸ் விரைவில் அரசியலில் குதிக்க இருப்பதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 
 
சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் அதன் பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆலோசனை வழங்கி வந்தார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த விஜயகுமார் சென்னை திரும்பி விட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அவர் பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபடப்போவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தி உண்மையா? அண்ணாமலை போல் அவரும் அரசியலில் குதித்து அதிரடியாக மக்களுக்கு சேவை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்