அரசியல்வாதி வேடத்தில் இயக்குனர் மிஷ்கின்…. மாவீரன் பட லேட்டஸ்ட் அப்டேட்!

வியாழன், 20 அக்டோபர் 2022 (15:52 IST)
சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக வியாபாரம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துவரும் இயக்குனர் மிஷ்கின் அரசியல்வாதி வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்