தலைமை ஏற்க அழகிரிக்கு அழைப்பு : திமுகவில் சலசலப்பு

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (14:00 IST)
திமுகவில் தலைமை ஏற்க வருமாறு அழகிரிக்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 
முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக  திமுக தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்கிறார். எனவே, திமுகவின் தலைமையாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். திமுகவின் செயல்தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பின், ஆர்.கே.நகர் தேர்தலை திமுக சந்தித்தது. ஆனால், அதில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்துள்ளார்.
 
அந்நிலையில், ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என அவரின் சகோதரர் அழகிரி பரபரப்பு பேட்டியளித்தார். இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர் ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளார். அதில், தலைமையேற்று திமுகவை காப்பாற்று எனக் குறிப்பிட்டு அழகிரி மற்றும் தயாநிதிமாறன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
 
இந்த விவகாரம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்