திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (13:41 IST)
திரு.அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.


இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார். தினசரி இக்கோவிலுக்கு ஆயிரக்காண பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
 
இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் (அருணாசலேஸ்வரர் கோவிலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெறும் வி.சி.கே. காஞ்சிபுரம்) என்று குறிப்பிடப்பட்டுருந்தது.
 
இதுகுறித்து கோவிலின் இணை ஆணையர் அளித்த புகாரின் பேரில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்