ஐஐடி இயக்குனரின் காரை மறித்த மாணவர்கள்..

Arun Prasath
வியாழன், 14 நவம்பர் 2019 (19:03 IST)
ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக சென்னை ஐஐடி மாணவர்கள் ஐஐடி இயக்குனரின் காரை வழிமறித்து மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.

கடந்த 9 ஆம் தேதி, ஐஐடியில் கேரளாவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி பாத்திமா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியரின் தொடர் தொல்லையால் மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி பாத்திமாவின் பெற்றோர் தற்கொலையை குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட 11 பேராசிரியர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் விசாரணை நடத்தி வந்தார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே..விஸ்வநாதன் பேட்டியளித்தார். இந்நிலையில் பாத்திமா மரணம் குறித்து போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர கோரி ஐஐடி இயக்குனரின் காரை வழிமறித்து மாணவர்கள் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்