ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை காவல் ஆணையர் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அந்த வழக்கு மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றப்படுகிறது.
கடந்த 9 ஆம் தேதி, ஐஐடியில் கேரளாவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி பாத்திமா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியரின் தொடர் தொல்லையால் மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
மாணவி பாத்திமாவின் பெற்றோர் தற்கொலையை குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட 11 பேராசிரியர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே..விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார்.