சகாயம் ஐஏஎஸ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் !!!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (15:52 IST)
கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வில் செல்லவுள்ளதாக அரசுக்கு முறைப்பட விண்ணப்பித்திருந்த சகாயம் ஐஏஎஸ்க்கு தற்போது  பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஐஏஎஸ் அதிகாரியும் இளைஞர்களின் ரோல்மாடலும் நேர்மைக்கும் உண்மைக்கும் உதாரணமாயிருக்கிற சகாயம் ஐஏஎஸ் அவர்கள் தற்போது தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில்  பணியாற்றி வந்தார். இதற்கு முன் பல்வேறு பொற்ப்புகளில் வகித்து அரசியல் வாதிகளுக்கும் அரசுக்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அவர் கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வில் செல்லவுள்ளதாக அரசுக்கு முறைப்பட விண்ணப்பித்திருந்தார்.

எனவே இன்று சகாயம் ஐஏஎஸ் தற்போது  பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.  
அடுத்து அவர் அரசியலில் குதிக்கப்போகிறாரா என இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்