நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம்! கன்னட மொழி சர்ச்சை! - கமல்ஹாசனுக்கு திருமா ஆதரவு!

Prasanth Karthick

புதன், 28 மே 2025 (16:12 IST)

கமல்ஹாசனின் தமிழ் - கன்னடம் குறித்த பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து உருவானதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கன்னட அமைப்பினர் சிலர் தக் லைஃப் பட போஸ்டர்கள் பேனர்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இதனால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல்கள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் தமிழ் மொழி குறித்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. கமல்ஹாசன் கருத்துக்கு ஆதரவாக பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் “தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கன்னடம், மலையாளம் பேசுவோர் இந்த உண்மையை ஏற்க மறுக்கலாம். ஆனால் வரலாறு இதுதான்” எனக் கூறியுள்ளார். இதனால் இந்த தமிழ் - கன்னடம் பிரச்சினை மேலும் அரசியல் சர்ச்சைகளுக்கு உள்ளாகலாம் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்