என்னால் நம்ப முடியவில்லை :விஷால் ’கொதிப்பாக டிவீட் ’...

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (13:45 IST)
இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று சட்டத்தை மீறியதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் அவரது ஆரதவாளர்களைக் கைது செய்தனர்.  பின்  விஷாலை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று  ஒரு திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.விஷாலுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது தந்தை ஆகியோர் சங்கத்தின் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட பதிவுத்துறை அதிகாரிகள் சேகர், செல்வசுந்தரி, ஆகியோர் தற்போது எதிரணியினர் போட்ட சங்க பூட்டை முறைப்படி திறந்தனர்.
 
ஆனால் எதிரணியினர் விஷாலுக்கு எதிராகவும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
 
இது பற்றி விஷால் தன் டிவீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :
 
’தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று பூட்டு போடப்பட்டபோது எதுவும் பேசாமல் இருந்த போலீஸார் தவறு செய்யாத என்னையும் என் ஆதரவாளர்களையும் இன்று கைது  செய்யதுள்ளதை என்னால் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்