அப்ப எந்த 'சிஎம்' கிட்ட போனீங்க? நாசர் மனைவி ஆவேசம்

வியாழன், 20 டிசம்பர் 2018 (12:03 IST)
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பெரும் பிரச்சனை எழுந்துள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை நீக்க வேண்டும் என ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.



தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தை பூட்டுப் போட்டு பூட்டி அருகில் உள்ள காவல் நிலையத்தில் சாவியை அவர்கள் ஒப்படைத்துள்ளனர் . இந்த விவகாரத்தில் விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரதிராஜா உள்ளிட்ட சிலர் நேற்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இதற்கு பதிலளித்த விஷால், இளையராஜாவுக்கு விழா எடுப்பதை இவர்கள் விரும்பவில்லை என்றும் அதனால்தான் தன் மீது, இவர்கள் பழி சொல்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில் நடிகர் நாசரின் மனைவி கமீலா தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வரிடம் சென்று நியாயம் கேட்டது ஏன் என்பது குறித்து கேள்வி கேட்டு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
"நம்முடைய பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை இல்லையா ? அனுபவம் இல்லையா? துணிவு இல்லையா? 2006 தேர்தலில் நடந்தது என்ன?  அன்று ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தை என்ன செய்தீர்கள். வாக்குப் பெட்டியை உடைத்து வாக்குச் சீட்டுகள் காற்றில் பறந்தன. கிழிக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தை நள்ளிரவு வரை வைத்து மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. அப்போது எந்த முதலமைச்சரிடம் சென்றீர்கள்?   அன்றே ஜனநாயகப் படுகொலையை நிறுத்தியிருந்தால் இன்று தயாரிப்பாளர் சங்கம் உருப்பெற்றிருக்கும். இதுபற்றி யார் பேசப் போகிறீர்கள்?   2006க்கு பின்வந்த தயாரிப்பாளரிடம் இதைப்பற்றி யார் சொல்ல போகிறார்கள்." இவ்வாறு கமீலா நாசர் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
டுவிட்டர் லிங்க்
 

இதை என்னுடைய கேள்வியாகவே எடுத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டது நான்..@TSivaAmma @CMOTamilNadu @PTTVOnlineNews @ThanthiTV @news7tamil pic.twitter.com/FCrqyAVR6t

— Kameela (@nasser_kameela) December 19, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்