கொடைக்கானலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் பாதி வழியிலேயே திரும்பினார்களா? என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (17:28 IST)
கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பாதி வழியிலேயே திரும்பிக் கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கொடைக்கானலில் சீசன் தொடங்கிவிட்ட நிலையில் குளுகுளு தட்பவெப்பநிலையை அனுபவிக்க தமிழக மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
 
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அதிக எண்ணிக்கை சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொடைக்கானலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருவதால் பலர் பாதியிலேயே திருப்பி விட்டதாக கூறப்படுகிறது. 
 
எனவே கொடைக்கானல் பகுதிக்கு கூடுதல் காவல் துறை அதிகாரிகளை நியமனம் செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அதேபோல் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்