தனிக்குடித்தனம் நடத்த மனைவி வற்புறுத்தினால்… கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (16:52 IST)
பெற்றோரிடம் இருந்து தனிக்குடித்தனம் வரும்படி  மனைவி வற்புறுத்தினால்  கணவர் விவாகரத்து செய்யலாம் என்று கொல்கத்தா நீதிமன்றம் கூறறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாப்பூர் குடும்ப  நீதிமன்றத்தில்  நடைபெற்ற ஒரு வழக்கில், குமார் மண்டல் மற்றும் அவரது ஜார்னாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

இந்த வழக்கில், கணவர் தாக்கல் செய்த மனுவில்,  பெற்றோரிடம் இருந்து தனியாகப் பிரிந்து வர வேண்டுமென்று மனைவி வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து, நீதிமன்றம், இந்திய கலாச்சாரம், பெற்றோரை மகன் பார்க்க வேண்டுமென்பதை கற்றுக் கொடுக்கிறது. சமூகத்தின் இயல்பான நடைமுறையில், இருந்து மகனை மாற்ற மனைவி முயற்சிக்கும்போது, அதற்கு நியாயமுள்ள காரணங்கள் இருக்க வேண்டுமென்று நீதிமன்றம் கூறியிஉள்ளது.

மேலும்,  குடும்பத்தைவிட்டு, மற்றும் பெற்றோரைவிட்டு, மகன் தனியே பிரிந்து வர விரும்ப மாட்டார்கள் என இரு நபர் கொண்ட நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு எதிராக, கொல்கத்தா ஐகோர்டில் ஜார்னா வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்