400 ஓட்டுநர்களை நியமிப்பதற்கான ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும்- டிடிவி. தினகரன்

வியாழன், 6 ஏப்ரல் 2023 (17:56 IST)
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுனர்களை நியமிக்க போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி, சென்னை மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுனர்களை பணியமர்த்த போக்குவரத்துதுறை முடிவு செய்து,  இந்தப் பணிகளுக்கு தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது.

இது அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஒப்பந்தம் மூலம் 400 ஓட்டுநர்கள் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் அரசு விரைவுப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டால் அதில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நேரிடும் என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.)

எனவே, பயணிகளின் உயிரோடு விளையாடாமல் 400 ஓட்டுநர்களை நியமிப்பதற்கான ஒப்புதலை ரத்து செய்து அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள தற்போதைய நடைமுறையிலேயே ஓட்டுநர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்