கரூரில் அதிமுகவில் இணைந்த திமுக தொண்டர்கள் !

திங்கள், 3 ஏப்ரல் 2023 (23:11 IST)
திமுகவை சேர்ந்த தொண்டர்கள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் முன்னிலையில் அதிமுகவில்  இணைந்தனர்.

மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,  கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் தெற்கு பகுதி 12 வது வார்டு பகுதியின் திமுகவை சேர்ந்த மணிகண்டன், மணி ஆகியோர் திமுகவின் செயல்பாடுகள் பிடிக்காததால் திமுகவில் இருந்து விலகி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள்  முதலமைச்சரும், கழக பொதுச் செயலாளருமான எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் முன்னிலையில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

உடன் கரூர் தெற்கு பகுதி கழகச் செயலாளர் சேரன் பழனிசாமி, பொருளாளர் சிங்கார வெங்கட் ரமணன், 12வது வார்டு செயலாளர் செந்தில்குமார், அம்மா பக்தன் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,  தொண்டர்கள் பலருடன் இருந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்