சென்னையில் திடீர் மழை.. குளிர்ந்த தட்பவெப்பத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva
செவ்வாய், 23 ஜூலை 2024 (21:52 IST)
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பையும் மீறி திடீரென சென்னையில் மழை பெய்ததால் சென்னையில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் திடீர் என இன்று மழை பெய்தது. தேனாம்பேட்டை, அண்ணா சாலை, தியாகராய நகர், வடபழனி, அண்ணா நகர், நந்தனம், நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், மீனம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் கன மழை பெய்தது.
 
சில இடங்களில் ஒரு மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் பெய்த கனமழை காரணமாக தற்போது குளிர்ந்த தட்பவெட்ப நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்