இரவை குளிர்விக்க வருகிறது மழை! 30 மாவட்டங்களுக்கு அலெர்ட்! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick

வியாழன், 18 ஜூலை 2024 (20:10 IST)

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு பல மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்