ஆளுனரை ஒரு மாநில அரசு நீக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?

Mahendran
திங்கள், 12 பிப்ரவரி 2024 (18:54 IST)
ஆளுநரை நீக்க வேண்டும் என்றும் ஆளுநரை மாநிலத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு ஆளுநரை மாநில அரசு நீக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது? என்பதை பார்ப்போம். 
 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநில ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுபவர். அவர்  மக்களின் பிரதிநிதி இல்லை என்றாலும் மத்திய அரசின் பதவி பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறார். அவருக்கு என சில அதிகாரமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஒரு ஜனாதிபதியை  பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் முடியும், ஆனால் ஒரு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டசபையால் முடியாது என்பதுதான் உண்மை. ஒரு ஆளுனரை நியமிப்பது குடியரசு தலைவர் மட்டுமே. அதேபோல் ஆளுநரை திரும்ப பெற்றுக் கொள்வது அல்லது நீக்குவது என்பது குடியரசு தலைவருக்கு மட்டுமே உள்ள அதிகாரம் என்பதால் மாநில சட்டசபையால் அது முடியாது என்பதுதான் சட்டத்தின் படி இருக்கிற உண்மை. 
 
ஆனால் அந்த உண்மை புரியாமல் தான் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என்று பேசி வருகின்றார் என்று குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்