அரசின் உரையில் உண்மை இல்லை, அதனால் வாசிக்கவில்லை: ஆளுனர் ரவி விளக்கம்..!

Mahendran

திங்கள், 12 பிப்ரவரி 2024 (12:31 IST)
தமிழ்நாடு அரசின் உரையை இன்று வாசிக்காமல் ஆளுநர் ரவி புறக்கணித்த நிலையில் உரையை ஏன் வாசிக்கவில்லை என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். 
 
தமிழக சட்டசபையில் இதுவரை இல்லாத அளவில் தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பதில்  இருந்து ஆளுநர் ரவி புறக்கணித்தார். அவர் அரசின் உரையை வாசிக்காமல் அமைதியாக உட்கார்ந்து இருந்த நிலையில் அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தமிழக அரசின் உரையை ஏன் வாசிக்கவில்லை என்பது குறித்து ஆளுநர் ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில் கூறி இருப்பதாவது:
 
தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் பாட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால்  அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. மேலும் அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. அரசின் உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால், முழுமையாக வாசிக்க விரும்பவில்லை
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்