ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது: அமைச்சர் ரகுபதி

Mahendran

திங்கள், 12 பிப்ரவரி 2024 (12:36 IST)
ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது என அமைச்சர் ரகுபதி ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்க மறுக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசின் உரையில் இருந்து ஒரு வார்த்தையை கூட ஆளுநர் பேசவில்லை. உரையில் உள்ளதை பேசாமல், தனது சொந்த கருத்தை ஆளுநர் பேசியுள்ளார். கேரள ஆளுநராவது, உரையில் இருந்த ஒருசில வரிகளையாவது பேசினார் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
 
ஆளுனரின் உரை புறக்கணிப்பு குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியபோது, ‘முதலில் தமிழ்தாய் வாழ்த்து, பிறகு ஆளுநர் உரை, இறுதியாக தேசியகீதம் என்பதே அவை மரபு. பேரவை விதிகளின்படியே முதலில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது
 
தேசிய கீதம் இசைத்துதான் ஆளுநரை அழைத்து வந்தோம், ஆளுநரின் சொந்தக்கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். மேலும் அவை மரபை மீறி ஆளுநர் செயல்படுவது முறையற்றது, நாகரீகமற்றது என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்