தங்கம் வாங்க நல்ல நேரம் !!!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (17:33 IST)
கொரொனா தாக்கத்தால்  சர்வதே சந்தையில்  அமெரிக்க டாலர், கடன்பத்திரங்கள், கிரிப்ரோ கரன்சி போன்றவற்றின் மீதான முதலீட்டுக்குப் பதிலாக  தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் கவனம் குவித்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை சமீக நாட்களாக உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆபரண தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து சவரன் ஒன்றுக்கு ரூ.35,520 என விறபனையாகி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்