சென்னை செவிலியருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு! – அதிர்ச்சி தகவல்!

வியாழன், 24 ஜூன் 2021 (16:54 IST)
டெல்டா கொரோனாவின் உருமாறிய வைரஸான டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு சென்னை செவிலியருக்கு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் வெவ்வேறு நாடுகளில் பல வகையில் உருமாறி வருகிறது. அவ்வாறு இந்தியாவில் உறுமாறிய கொரோனா வைரஸுக்கு டெல்டா வைரஸ் என பெயரிடப்பட்டது.

இந்த வைரஸ் பாதிப்பு உலக நாடுகள் பலவற்றிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதன் மற்றுமொரு உருமாற்றமான டெல்டா ப்ளஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் டெல்டா ப்ளஸ் வகை பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இரண்டே வாரத்தில் இரண்டு மடங்காக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸால் மத்திய பிரதேசத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்ட 1,159 ஆய்வுகளில் 554 ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் சென்னையை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் இருந்தது தெரிய வந்துள்லது.

தற்போது அவர் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டாலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்