நடிகர் விஜய் தற்போது ஒரு பக்கம் தளபதி 69 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதோடு, இன்னொரு பக்கம் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த நிலையில், இன்று அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் "ஜனநாயகன்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் அவர் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாகவும், நான்கு நாட்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் புதிய நிர்வாகிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான மாவட்டச் செயலாளர்களின் பணிகள் மற்றும் அவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.