தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.