திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணமா? முதல்வர் டுவிட்

Webdunia
சனி, 8 மே 2021 (11:42 IST)
இன்று முதல் தமிழக அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பணிபுரியும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் அரசு நகரப் பேருந்துகளில் உள்ள ஒயிட்போர்டு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு பெண்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெண்களை அடுத்து இந்த சலுகையை திருநங்கைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதில் கூறியதாவது:
 
மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்