புதிய கட்டுப்பாடுகள் எதிரொலி: பேருந்து, ரயில்களில் கூட்டம் குறைந்தது!

வெள்ளி, 7 மே 2021 (07:42 IST)
புதிய கட்டுப்பாடுகள் எதிரொலி: பேருந்து, ரயில்களில் கூட்டம் குறைந்தது!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அடுத்து நேற்று முதல் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது என்பதை பார்த்தோம். அந்தவகையில் பேருந்துகள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த் நிலையில் அலுவலக நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் குறிப்பாக மின்சார ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடு விதித்ததன் காரணமாக பேருந்து மற்றும் மெட்ரோ புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்தது
 
அலுவலக நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் பஸ்கள் ரயில்கள் காற்று வாங்கியதாக தகவல்கள் வெளிவந்தன. 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற காரணமாக பெரும்பாலானோர் பயணத்தை தவிர்த்தனர் 
 
ஒரு சில நேரங்களில் பேருந்துகளில் அதிக கூட்டம் ஏற்ற வேண்டிய நிலை வந்த போது கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் காலை மற்றும் மாலை வேலை தவிர பகல் நேரங்களில் பெரும்பாலும் பேருந்துகளில் கூட்டம் இல்லாமலே சென்றனர். அதேபோல் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் வெகுவாக குறைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்