பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 12 டிசம்பர் 2024 (16:10 IST)
சென்னையில் பூண்டி ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
வங்க கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழக முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதையும் பார்த்து வருகிறோம். இதனால் சென்னையில் உள்ள நீர்த்தேக்கங்களில் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. 
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும், மொத்த கொள்ளளவு 35 அடியிலிருந்து தற்போது 34 அடியை நீர்மட்டம் எட்டிவிட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து, ஏரிக்கு 3500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரிநீராக இன்று மதியம் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
உபரிநீர் வருகையை கருத்தில் கொண்டு, படிப்படியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்