சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சங்கத்தினர் (சிஐடியு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!

J.Durai
புதன், 31 ஜூலை 2024 (15:24 IST)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியில் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் (சிஐடியு) பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் தொழிலாளர்களின் வேலையை அதிகாரிகள் பறிப்பதை கண்டித்தும்,சரவெடி உற்பத்திக்கு அனுமதி வழங்க கோரியும், ஆலை மூடலால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கோரியும், ஆய்வில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதை கண்டித்து வேலை நிறுத்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்