குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran

சனி, 19 ஏப்ரல் 2025 (09:04 IST)
நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்புவின் 'எக்ஸ்' பக்கத்தை ஹேக்கர்ஸ் ஹேக் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு என்பதும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி, தற்போது பாஜகவின் நிர்வாகியாக இருக்கும் குஷ்பு, தனது பக்கத்தில் அவ்வப்போது பாஜகவின் கருத்துக்களை பதிவு செய்து வந்தார்.

தனது 'எக்ஸ்' பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது 'எக்ஸ்' கணக்கில் ஹேக்கர்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றி உள்ளதாகவும், இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும், விரைவில் தனது கணக்கு மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏற்கனவே பல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகளின் 'எக்ஸ்' பக்கங்களை ஹேக்கர்கள் கைப்பற்றி, பல சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, திரிஷாவின் எக்ஸ் பக்கம் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டு அதில் அவருக்கே தெரியாமல் கிரிப்டோ கரன்சி உள்பட பல பதிவுகள் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோலதான் தற்போது குஷ்புவின் 'எக்ஸ்' பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்