போலீஸாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி விவாரணம் அறிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும்,மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்,விவசாயிகளுக்கு ஓய்வூதியம், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறினர்.
டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறியபோது அம்பாலா எல்லையில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதன்பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசை எச்சரித்தனர்.
இந்த நிலையில், மத்திய அரசு விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி ஹரியானாவில் போலீஸார் நடத்திய தாக்குதலில் 24 வயது சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார்.
சுப்கரன் சிங் உயிரிழப்பு குறித்து, விவசாய சங்கத் தலைவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு விவசாயிகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மொத்தம் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், போலீஸாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி விவாரணம் அறிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
மேலும், விவசாயி சுப்கரண் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.