வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் காரைக்காலில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.