மகன் செய்த காரியத்தால் அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (09:51 IST)
திருட்டு வழக்கில் மகன் கைதானதால் அவமானம் தாங்காமல் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணுரில் வேலு(62) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மகன் ராம்குமார்(26). ராம்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பரது வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் தங்க நகைகள் மற்றும் 12 ஆயிரம் ரொக்கத்தை திருடியுள்ளனர். இவ்வழக்கில் ராம்குமார் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
 
இது தொடர்பாக போலீஸார் ராம்குமார் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மற்றும் தாயை விசாரித்துள்ளனர். இதனால் அவனது தந்தை மனவேதனை அடைந்துள்ளார். மகன் கைதானது, போலீஸார் வீட்டிற்கு வந்து விசாரித்தது ஆகியவற்றால் அவமானம் தாங்காமல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எண்ணூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்