சோபன் பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்? - அம்ருதாவிற்கு நீதிமன்றம் கேள்வி

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (13:44 IST)
ஜெ.வை தன் தாய் என உரிமை கோரும் அம்ருதா, நடிகர் சோபன்பாபுவை தன் தந்தை என உரிமை கோரதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 
பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். ஆனால், அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியிருந்தனர். அந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதா வழக்கு தொடர்ந்தார். 
 
அந்த வழக்கு விசாரணை சமீபத்தில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற வாதத்தில், ஜெ.வின் உடலிலில் இருந்து டி.என்.ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.   
 
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை இன்று மீண்டும் துவங்கியது. அப்போது, ஜெயலலிதாவை தாய் என உரிமை கோரும் அம்ருதா, சோபன் பாபுவை தனது தந்தை என உரிமை கோராதது ஏன்? ஜெ.வின் ரத்த மாதிரிகள் ஏதேனும் அப்போலோ மருத்துவமனையில் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். 
 
இதுகுறித்து அரசிடம் கேட்டு சொல்வதாக வழக்கறிஞர் தெரிவித்தார். அதன் பின் கருத்து கூறிய நீதிபதி “ஜெ.வின் வாரிசு குறித்து வரும் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அம்ருதா போல் 6 கோடி பேர் வந்தால் என்ன செய்வது? ஜெ.வின் வாரிசு வழக்கை மெரினாவில் நடத்தலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்