அதிதீவிர புயலாக மாறும் ஃபானி: தப்பியது தமிழகம்

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (13:24 IST)
ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் எனவும், ஃபானி புயல் தமிழக கரையை கடக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

 
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக சில தினங்களுக்கு முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டிருந்தது. 
 
இந்த ஃபானி புயல் இன்று காலை சென்னைக்கு ர்தென் கிழக்கே 880 கிமி தூரத்தில் நிலைக்கொண்டிருந்தது. இந்த புயல் நாளை அதிதீவிர புயலாக நாளை மாறும். அதோடு வடமேற்கு திச்சையை நோக்கி நகரும் அதிதீவீர புயல், மே 1 ஆம் தேதிக்கு பின் தனது பாடஹியை மாற்றி வடகிழக்கு திசை நோக்கி பயணிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
இதனால், இந்த புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கரையை கடக்காது, அதற்கு பதில் ஒடிசாவில் கரையை கடக்ககூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்