திசை மாறுகிறது ஃபனி புயல்: சென்னைக்கு ஆபத்து இல்லை

சனி, 27 ஏப்ரல் 2019 (15:59 IST)
தமிழகத்தை ஃபனி புயல் தாக்காது என்றும்,  தற்போதைய நிலையில் ஃபனி புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் பேட்டி
 
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழகத்தில் இருந்து சுமார் 1200 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரையோரம் செல்லும். இருப்பினும் தமிழகத்தின் வழியே இந்த புயல் கரையை கடக்க தற்போதைய நிலையில் வாய்ப்பு இல்லை. அனேகமாக வங்கதேசத்தை நோக்கி இந்த புயல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பாலசந்திரன் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
 
மேலும் இந்த புயல் தமிழகத்தின் அருகே வரை வரவுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடற்கரை பகுதியில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று பாலசந்திரன் மேலும் கூறினார். எனவே ஃபனி புயலின் தற்போதைய நிலவரப்படி சென்னை உள்பட தமிழகத்தின் எந்த பகுதிக்கும் ஆபத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்