தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக சில தினங்களுக்கு முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டிருந்தது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஆனால் அதன் பின்னர் புயல் சென்னையில் கரையைக் கடக்காது என்றும் வட மேற்குப் பகுதியை நோக்கி நகருகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் வெப்பநிலை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இன்று முதல் ஃபானி புயல் அதி தீவிரப் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர இருப்பதால் வட தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மிதமான மழை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.