பாஜகவுக்கு தளம் அமைக்கவுமில்லை; அமமுகவை இணைக்கவுமில்லை! – எடப்பாடியார் திட்டவட்டம்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (10:42 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அமமுகவுடன் இணைய சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை முன்னதாக வெளியிட்ட அதிமுக இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக – அமமுக இணைவது பற்றியும், பாஜகவுக்கு அதிமுக அதிக சலுகைகள் தருவது குறித்தும் தொடரந்து அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்து வருகிறது.

இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி “தமிழகத்தில் பாஜக அடித்தளம் அமைக்க அதிமுக எந்த விதத்திலும் உதவவில்லை. மத்திய அரசுடன் அதிமுக அரசு இணக்கமாக செயல்பட்டு வருகிறது. அதேபோலா அதிமுக – அமமுக இணைப்பு என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதுடன், தவறாக பரப்பப்பட்ட தகவல்” என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்