எலுமிச்சை புல் டீ -ன் ஆரோக்கிய நன்மைகள் !!

வெள்ளி, 12 மார்ச் 2021 (00:45 IST)
எலுமிச்சை புல் நீளமான இலைகளைக் கொண்டுள்ளது. இந்த எலுமிச்சை புல் டீ தயாரிக்க அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.
 
 
இந்த டீயை குடிப்பதால் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை மற்றும் தொப்பை குறைப்பு போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருவதாக  ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 
 
தினமும் காலையில் பலரும் அவதிப்படும் பிரச்சனையில் ஒன்று மலச்சிக்கல். இந்த பிரச்சனையை எளிய முறையில் போக்க உதவும் ஒரு பொருளாக எலுமிச்சை  புல் உள்ளது. இந்த புல்லில் இருக்கும் சிட்ரஸ் அமிலம் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
 
எலுமிச்சை புல் டீ உடல் முழுக்க உள்ள கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இது ஆயுர்வேத மருந்தாக கருதப்படுகிறது. இந்த புல்லின்  மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது.
 
எலுமிச்சை புல் அதிக மருத்துவ குணம் கொண்டது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் உள்ளதால் இந்த  புல்லை கொண்டு டீ தயாரித்து குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
எலுமிச்சை புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது. எனவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
 
எலுமிச்சை புல் டீ தயாரிப்பு:
 
முதலில் எலுமிச்சை புல்லை நன்கு கழுவி பின்பு இதனை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து  பதினைந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, ஆறிய பின்பு இதனை வடிகட்டி குடிக்க ஏற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்