குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 விஷயத்தில் அந்தர்பல்டி அடிக்கும் திமுக: எடப்பாடி பழனிசாமி

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (13:06 IST)
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பில் திமுக அரசு அந்தர்பல்டி பல்டி அடித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 தரும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று தெரிவித்தார். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் இந்த திட்டம் தொடங்கவிருப்பதாகவும் இந்த திட்டத்திற்காக ரூ.9000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.,
 
ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமை தொகை என ஏற்கனவே அறிவித்துவிட்டு தற்போது தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு என அந்தர்பல்டி அடித்துவிட்டனர் என விமர்சனம் செய்து உள்ளார். 
 
தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் என்ற நிபந்தனை காரணமாக ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்