செந்தில் பாலாஜி சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும்! - அமலாக்கத்துறை வாதம்..!

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (14:10 IST)
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்துவரும் நிலையில் செந்தில் பாலாஜியை ஜாமினில் வெளியே விட்டால் சாட்சிகளை அவர் அச்சுறுத்தக்கூடும் என அமலாக்கத்துறை வாதம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அமலாக்கத்துறை வழக்கறிஞர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டபோது செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும் 
 
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார், எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறும் செந்தில் பாலாஜி தான் வழக்கின் விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்தி வருகிறார் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் வாதிட்டு உள்ளார் 
 
இந்த வாதத்திற்கு பின்னர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் வாதம் செய்த பின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்